ஸ்பெயினின் மட்றித் நகரில் கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
மாற்றத்துக்கு ஊர்வலம் என்ற தலைப்பில் இடது சாரி பொடெமொஸ் கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.
மாற்றம் இப்போது என பொருள்படும் பதாகைகளை ஏற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆம் எம்மால் முடியும் என கோஷம் எழுப்பினர்.
No comments:
Post a Comment