நம்ம தமிழ் சினிமாவுல எப்படி எதிர்பார்க்காத படம் செம வசூல் செய்து மெகா ஹிட் ஆகுதோ அதே போல, ஹாலிவுட்டிலும் நடக்குறது உண்டு. அதற்கு ஒரு சான்று தான் போன வருஷத்துல வசூலில் டாப் இடத்தை பிடிச்ச படம், ஹங்கர் கேம்ஸ் – மோக்கிங்ஜே.
ஹாலிவுட் ரசிகர்களுக்கு எப்போதுமே இந்த காதலுடன் ஆக்ஷன் கலந்த பேய், காட்டேரி கதைகள் என்றால் ரொம்ப பிரியம். அந்த வகையில் வந்து வசூலை அள்ளிச் சென்றது டுவைலைட் சாகா சீரீஸ்.
காட்டேறிகளுக்கும், ஓநாய் மனிதர்களுக்கும் இடையிலான சண்டைக்கு மத்தியில் காதல் என்ற விச்சித்திர கற்பனையில் இந்த சீரீஸ் சென்றது. இதற்கு ஐரோப்பாவில் மிகப் பெரிய வரவேற்பு.
இந்த வரிசையில் வந்துள்ள திரைத் தொடர் தான் ஹங்கர் கேம்ஸ். ஆக்ஷனுடன் காதல் கலந்த இந்த சீரிசின் மூன்றாவது படம் தான் மோக்கிங்ஜே பார்ட் 1.
ஹாலிவுட் பிரபல நாயகி, ஜெனிபர் லாரன்ஸ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த சீரீசின் படம் எப்போது வந்தாலும் அந்த வருஷம் அது தான் டாப்.
அந்த வரிசையில், சென்ற ஆண்டு வந்த ஹங்கர் கேஸ்: மோக்கிங்ஜே சென்ற புதன் கிழமை வரை 333.2 மில்லியன் டாலர்கள் வசூலித்து சென்ற ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெறுகிறது.
இதற்கு அடுத்ததாக, 333.17 மில்லியன் வசூல் செய்து, மல்யுத்த வீரர் படீஸ்டா நடித்த கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி படம் இரண்டாம் இடத்தை பிடித்தது. மூன்றாம் இடத்தை கேப்டன் அமெரிக்கா: விண்டர் சோல்ஜர் பிடித்துள்ளது.
சென்ற ஆண்டு முதல் பத்து இடத்தை பிடித்துள்ள ஹாலிவுட் படங்களின் பட்டியல்:
1 The Hunger Games: Mockingjay - Part 1 $335,123,000
2 Guardians of the Galaxy $333,176,600
3 Captain America: The Winter Soldier $259,766,572
4 The LEGO Movie $257,760,692
5 The Hobbit: The Battle of the Five Armies $251,678,000
6 American Sniper $248,942,000
7 Transformers: Age of Extinction $245,439,076
8 Maleficent $241,410,378
9 X-Men: Days of Future Past $233,921,534
10 Big Hero 6 $218,056,000
No comments:
Post a Comment