Monday, 2 February 2015

ஆடு, மாடு, கோழி, பூனை இதுக்கெல்லாம் புது ஏர்போர்ட் வரப்போது தெரியுமா…!!


உலகின் பிரபலமான விமான நிலையங்களுள் ஒன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஜான் எப்.கென்னடி விமான நிலையம்.
இந்த விமான நிலையம் வாயிலாக வெளிநாடுகளுக்குச் செல்வதும், உள்நாட்டுக்கு வருவதுமாக ஆண்டிற்கு சுமார் 5 கோடி பேர் பயன்பெறுகின்றனர்.
சுமார் 19 கிலோமீட்டர் அளவிலான இந்த விமான நிலையத்திற்கு மேலும் ஒரு சிறப்பு கிடைக்கப் போகிறது. உலகின் முதல் விலங்கு விமான நிலையமாகவும் இது பெயர் பொறப் போகிறது. விலங்குகளுக்கான முதல் விமான முனையம் வரும் 2016ம் ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முனையம் 178,000 சதுர அடியில், 48 மில்லியன் டாலர் செலவில் உருவாக இருக்கிறதாம். முழுவதுமாக உருவான பிறகு இந்த முனையத்தில், 70 ஆயிரம் விலங்குகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படுமாம். இந்த விமான நிலையத்தின் ஒரு பகுதியாக 24 மணி நேர, விலங்கு பராமரிப்பு நிலையமும் அமைக்கப்பட இருக்கிறதாம்.

No comments:

Post a Comment