Wednesday, 11 February 2015

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை!??


ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல வரும் சனிக்கிழமையன்று காதலர் தினக் கொண்டாத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் வீரமாணிக்கம், சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘பண்பாடு கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் பிப்ரவரி 14ல் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினம் கொண்டாட்டம் என்ற பெயரில் நட்சத்திர ஓட்டல்களில் இரவு நேரங்களில் குடித்து விட்டு ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளம் போடுவதின் மூலம் நமது பாரத கலாசாரம் சீரழிகிறது.
மேலும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் அறுவருக்கத் தக்க வகையில் கடற்கரையிலும், பூங்காக்களிலும், பெரிய தலைவர் நினைவு இடங்களிலும் சமூக சீர்கேடுகளை செய்து வருகிறார்கள். ஆகவே காதலர் தினம் கொண்டாட தடை விதிக்க வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment