விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கிவரும் ’புலி' படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடிக்கின்றனர். அவர்களுடன் முக்கிய வேடங்களில் நடிகை ஸ்ரீதேவியும், நான் ஈ சுதீப்பும் நடிக்கிறார்கள்.
இப்படம் விஜய் கேரியரிலேயே இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிவருவதாக திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மூன்றாவது கட்டத்தை நெருங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பரங்கிமலை பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரமாக நடந்து முடிந்திருக்கிறது.
புலியை தேடி போலீஸ் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக விஜய்யுடன் தொப்பையும், வீரப்பன் மீசையுடைய நடிகர்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார் சிம்புதேவன். படபிடிப்பு முடிந்ததும் இந்த காட்சியை மானிட்டரில் பார்த்த இருக்கிறார்கள் படக்குழுவினர்.
அப்போது இந்த காட்சியை பார்த்த விஜய் திடீரென விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இயக்குநரை கட்டித்தழுவி படம் ஹிட் ஹிட் என்று கை குலுக்கிருக்கிறார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படபிடிப்பு கேரளா, ஊட்டிப்பகுதியில் நடக்க உள்ளது.

No comments:
Post a Comment