தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ’ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ஈராஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் மதுரையில் நடந்து வருகிறது. ஆனால் அதற்குள்ளாகவே படம் பெரும் விலைக்கு விற்கப்பட்டு விட்டதாம். முன்னணி நடிகர்களின் படங்கள்தான் படப்பிடிப்பில் இருக்கும்போது வாங்க போட்டி போடுவார்கள்.
ஆனால் வளரும் கதாநாயகனான சிவகார்த்தியேனின் படத்தை வாங்கவும் இப்போது போட்டி போடுகிறார்களாம். காரணம் இவரை நம்பி போட்டால் லாபம் இல்லை என்றாலும் போட்டா காசை எடுத்துவிடலாம் என்பதுதான்.
ரஜினி முருகன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளார். அந்த தொகை எவ்வளவு என்பதை வழக்கம்போல் வெளியிட வில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றி சாயல் இருப்பதால் படம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது.
இதிலும் சூரி நடிக்கிறார். சத்யராஜ் கேரக்டருக்கு பதில் ராஜ்கிரண் நடிக்கிறாராம். இமான் இசை அமைக்கும் இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment