Thursday, 12 February 2015

இலங்கையில் சீனாவின் கப்பல்..? அமெரிக்கா உசார்….


இலங்கையின் ஊடான சீனாவின் கப்பல் போக்குவரத்து குறித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதற்காக அமெரிக்காவின் கடற்படை புலனாய்வு பிரிவு, ஆஸ்திரேலியாவின் புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பை கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து வெளியேறும் ஈழ அகதிகளின் கப்பல்கள் குறித்த தகவல்களை ஆஸ்திரேலிய புலனாய்வாளர்கள் வெற்றிகரமாக பெற்று அவ்வாறான கப்பல்களை இடைமறித்து வந்துள்ளனர்.
அதுபோன்றே இலங்கையின் மூலம் இந்து சமுத்திரத்தில் சீனா தமது யுத்தக் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை நகர்த்தும் முறைகள் குறித்து ஆஸ்திரேலிய புலனாய்வாளர்களின் மூலம் தகவல்களை திரட்ட அமெரிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இரண்டு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment