கடந்த ஆண்டில் ஐ ஃபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் என வெளியிட்டு பெருந்தொகை சம்பாதித்த ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த படப்பிற்கு தயாராகி விட்டது.
தனது கடைசி வெளியீடு வெற்றிகண்ட ஆர்வத்தில் அடுத்த படைப்பான ஐ ஃபோன் 7ஐ வெளியிட முடிவு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் ஐ ஃபோன் 7 இவ்வருடம் செப்டம்பரில் வெளியாகும் எனத் தெரிகிறது.
4K தொழில்நுட்பத்துடன் கூடிய HDR வீடியோ ரெக்கார்டிங் உடன் வெளிவர இருக்கின்றதாம். மேலும், இதில் A9 என்ற ப்ராஸ்ஸர் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். 2GB RAM வசதியுடன் வெளியாக உள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு 21MP கேமரா இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளது. அப்படியெனில் இதன் புகைப்பட தரமானது, ஒரு DSLR அளவிற்கு இருக்கும்.
3D ஸ்க்ரீன் சப்போர்ட்டுடன் இருக்கும் இதில் வீடியோ கேம்களுக்காக மினி கண்ட்ரோலார் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆப்பிள் iOS 9 பதிப்பில் இது வருகிறதாம்.
இதன் விலை இந்திய மதிப்பில் குறைந்தது, ரூ. 40 ஆயிரங்களுக்கு குறையாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment