ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்திடம், ரூ. 25 கோடி கடன் வழங்க வேண்டும் என்று கடன் கேட்டுள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று காலை திருப்பதி சென்று, வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அரசியல் தலைவர்கள் வருகை தருவது மிகவும் சாதாரணம். சில தினங்களுக்கு முன் தான், இந்திய சுற்றுப் பயணம் வந்த இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேன திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
இவரை அடுத்து, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயிடு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். நேற்று முதல்வர் சந்திரபாபுவின் வருகைக்காக தேவஸ்தான அதிகாரிகள், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஏழுமனலையானை தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் சந்திரபாபு.
அப்போது அவர் கூறுகையில்,
“திருப்பதியில் சிலர் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.”
”இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசு பரிசீலிக்கும். திருப்பதி குடிநீர் திட்டத்துக்காக ஆந்திர அரசுக்கு, ரூ. 25 கோடி கடன் வழங்கும்படி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.”
”இதன் மூலம் திருப்பதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.”
என்று தெரிவித்தார். இது குறித்து திருப்பதி தேவஸ்தானம், எந்த பதிலும் இன்னும் வெளியிடவில்லை. இதனை அடுத்து முதலமைச்சர் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா புறப்பட்டுச் சென்றார்.

No comments:
Post a Comment