Monday, 23 February 2015

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 24)


பிப்ரவரி 24
1955
ஆப்பிள் கம்பியூட்டர் (Macintosh) உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம்...!
ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர்களான மேக்கை வடிவமைத்தவர். அது மட்டுமல்லாது, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை ஆட்சியர்களுள் ஒருவராக இருந்தவர்.
உலகின் தலை சிறந்த அனிமேஷன் நிறுவனங்களுள் ஒன்றான, பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸையும், நெக்ஸ்ட் நிறுவனத்தையும் நிறுவியவர் இவர் தான். 1955ல் இதே நாளன்று திருமணமாகாத பல்கலைக் கழக காதல் ஜோடி ஒன்றிற்கு பிறந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
அந்த காதல் ஜோடி இவரை கலிஃபோர்னியத் தொழிலாளர்களான பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் என்றோர் தத்தெடுத்து வளர்த்தனர். தன் பெற்றோர் பற்றி தெரிந்ததில் இருந்தே இவருக்கு பள்ளி கல்லூரிகள் மீது வெறுப்பு வந்தது.
என்றாலும், விடா முயற்சியால், தனது 20வது வயதில் ஆப்பிள் கம்பியூட்டரான மேக்கிண்டோஷை கண்டுபிடித்தார். 1970களின் பிற்பகுதியில், ஸ்டீவ் வோசினியாக் (Steve Wozniak), மார்க் மார்குலா (Mike Markkula) ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார்.
1980களில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக் கணினியை அறிமுகம் செய்தார். 1985ல் ஆப்பிள் உறுப்பினர்களுடனான பூசலில், நிறுவனத்தை விட்டு வெளியில் வந்தார். இந்த வெளியேற்றம், தனக்கு மீண்டும் இளமைக்கு தள்ளப்பட்டது போன்ற ஒரு உணர்வைத் தந்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
இதை அடுத்து தான் நெக்ஸ்டு நிறுவனத்தை உறுவாக்கினார். 1996ம் ஆண்டு நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்கியது. இதை அடுத்து மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆனார். 1997 முதல் 2011 வரை இப்பதவியில் அவர் நீடித்தார்.
1974ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு வந்து, நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது சந்தித்த பின், அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு, புத்த மதத்தை பின்பற்ற ஆரம்பித்தார்.
அக்டோபர் 5ம் தேதி 2011ம் ஆண்டு கணையத்தில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மரணமடைந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். பல்கலைக் கழகங்களில் இவர் பேசிய தன் சுய கதையை மிகவும் திறமையாக பேசியது மாணவர்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1582 - கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1918 - எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.
1920 - நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1948 - தமிழக அரசியல்வாதி ஜெ.ஜெயலலிதா பிறந்த தினம்.
இன்றைய சிறப்பு தினம்
கொடி நாள் (மெக்ஸிக்கோ)
சுதந்திர தினம் (எஸ்தோனியா)
தேசிய கலைஞர் தினம் (தாய்லாந்து)

No comments:

Post a Comment