Friday, 20 February 2015

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 21)


பிப்ரவரி 21
1952
தாய் மொழிக்காக உயிர்விட்ட மாணவர்களின் நினைவு தினம்...!!
இந்திய பாகிஸ்தானின் விடுதலைக்குப் பின் பாகிஸ்தான், வங்காளத்தை உள்ளடக்கி இருந்தது. கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட அப்பகுதியில் ஆட்சி மொழி உருதாகவே இருந்து வந்தது.
இதனை எதிர்த்து, ஆட்சி மொழியை தம் தாய் மொழியாகிய வங்காளத்துக்கு மாற்றக் கோரி, பாகிஸ்தானின் தலைநகர் தாக்காவில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
1952ம் ஆண்டு, இதே நாளன்று, இந்த போராட்டத்தில் நான்கு மாணவர்கள் தாய் மொழிக்காகத் தம் உயிரை விட்டனர். இதன் பின்னர் தான் வங்க மொழியும் அரச மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
இது வங்கப் பிரிவினைக்கு ஒரு அடிகோலாகவும் அமைந்தது. தாய் மொழிக்காக உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக, இந்நாளை உலக தாய் மொழி தினமாக, 1999ம் ஆண்டு யுனெஸ்கோ(UNESCO) அறிவித்தது.
அன்று முதல் இந்நாள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளன்று பல்வேறு சமூகத்தினரும் தத்தம் தாய் மொழிகளில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கருத்தரங்கம் முதலியவற்றை நடத்து கின்றன. தாய்மொழி குறித்த பிரச்சாரங்களும் சில இடங்களில் நடைபெறுகின்றன.
இந்நிகழவைத் தொட்டே, வங்காள மொழி இயக்கம், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உருவாக்கப்பட்டது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1878 - இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீஅன்னை பிறந்தார்.
1440 - புரூசியக் கூட்டமைப்பு உருவானது.
1804 - நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதித்து பார்க்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
மொழி இயக்கம் தினம் (வங்காளம்)
சர்வதேச தாய்மொழி தினம் (யுனெஸ்கோ)

No comments:

Post a Comment