Saturday, 21 February 2015

1 ரன்னுக்கு அதிக விக்கெட்டுகள்: பாகிஸ்தான் முதலிடம்!!!


உலகக் கோப்பை 2015 போட்டி தொடர் ஆஸி மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் 14 அணிகள் பங்கு பெறுகின்றன.
இதில் இதுவரை 11 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மிக மோசமான முறையில் தோல்வி அடைந்தது. இந்த அணி 3.1 ஓவரில் 1 ரன்னிற்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் குறைந்த ரன்னில் அதிக விக்கெட்டுகளை இழந்த அணி வரிசையில் முதலிடத்தினை பிடித்துள்ளது.
இதற்கு முன்பு 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் கனடா அணி 4 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து முதலிடத்தில் இருந்தது.
இன்று பாகிஸ்தான் அதனை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. பாகிஸ்தானின் மிக மோசமான ஆட்டத்தினை ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment