சோனம் கபூரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். கோலிவுட் ’புரூஸ் லீ’ தனுஷின் முதல் பாலிவுட் படமான ராஞ்சனாவில் ஹீரோயினாக நடித்திருதவர் இவர்.
ஆனால் அதற்கு முன்பே பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான டெல்லி-6 படத்தில் வரும் ‘மசக்கலி’ பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.
எனினும், இவர் பொதுவாக கவர்ச்சியின் பக்கம் இறங்குவதே இல்லை. தனது நடிப்பை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தார். இதனாலேயே இவரை பாலிவுட் ஒதுக்க ஆரம்பித்தது(கோலிவுட்டுக்கு வந்தால் கொண்டாடுவார்கள்). இடையில் பன்றிக் காய்ச்சல் வேறு வந்து பாடாய் படுத்தி விட்டது.
ஒரு வழியாக குணமடைந்த சோனம் கபூரை திரும்பிப் பார்க்க ஆளே இல்லை. இந்நிலையில் பாரிசில் நடந்த மாடலிங் அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்க சோனமிற்கு அழைப்பு வந்தது. அதில் கலந்துகொள்பவர்கள் கவர்ச்சியாக உடை அணிந்து வரவேண்டும்.
சோனத்திற்குத்தான் கவர்ச்சி என்றால் பிடிக்காதே அதனால் அவர் அந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளமாட்டார் என்று எண்ணிக்கொண்டிருந்த பாலிவுட்காரர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் அளவுக்குப் படுகவர்ச்சியாக ஒய்யார நடை நடக்க சம்மதித்தார்.
தற்போதைய இணையத்தள பரபரப்பு சோனம் கபூர்தான் என்று கூறும் அளவுக்குப் படுகவர்ச்சியாக அவரது படங்கள் உலா வரத் தொடங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவரே இணையத்தில் தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுக் கண்களைக் கூசச் செய்திருக்கிறார் சோனம்.
இதனால் சக நடிகைகள் எங்கே கிடைக்கும் வாய்ப்புகளும் பறிபோய்விடுமோ என்று பதறிப் போயிருக்கின்றார்களாம்.

No comments:
Post a Comment