Friday, 3 April 2015

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை 39 நாட்களில் கொண்டு சேர்க்கும் இயந்திரம்!!


அமெரிக்க ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது அதிவேகமான விண்வெளிப் பயணங்களுக்கு வழிவகை செய்யும் தொழில்நுட்பங்களை விருத்தி செய்யும் தனது திட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கு பல்வேறு நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது.
இந்த 'நெக்ஸ்ட்ஸ்டெப்' திட்டத்தில் இணைந்துகொண்டுள்ள கம்பனிகளில் ஒன்று, தாம் செவ்வாய்க்கிரகத்திற்கு 39 நாட்களில் பயணத்தை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யக்கூடிய இயந்திரமொன்றின் மாதிரியை விருத்தி செய்துள்ளதாக உரிமை கோரியுள்ளது.
அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மேற்படி அட் அஸ்ட்ரா ராக்கெட் கம்பனியானது ஏவுகணைகளுக்கு அதிவேக உந்துசக்தியை அளிக்கும் வஸிமிர் என்றழைக்கப்படும் முறைமையை விருத்தி செய்துள்ளது. இந்த இயந்திரத்தின் மாதிரி வகையானது ஏற்கனவே வெற்றிகரமாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த இயந்திரத்தை செவ்வாய்க்கிரகப் பயணத்திற்கு ஏற்ற வகையில் விருத்தி செய்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மேற்படி இயந்திரத்தை விண்வெளிப் பயணத்திற்கு உகந்த வகையில் விருத்தி செய்வதற்காக அந்த நிறுவனத்திற்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான நிதியை 3 வருட காலத்திற்கு நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வழங்கவுள்ளது.

No comments:

Post a Comment