Friday, 3 April 2015

உலகின் மிகவும் சிக்கலான முக மாற்று அறுவைச்சிகிச்சை…!


ஸ்பெயினைச் சேர்ந்த மருத்துவர்கள் நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு முகம் மிக மோசமான நிலையில் பாதிப்புக்குள்ளான நபர் ஒருவருக்கு இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகை செய்யும் மூலம் அந்நபரின் கழுத்து, வாய், நாக்கு மற்றும் தொண்டை என்பவற்றை மறுபடி கட்டமைக்கும் வகையில் சிக்கலான புரட்சிகர முகமாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
பார்சிலோனாவிலுள்ள வால் டிஹெப் ரோன் மருத்துவமனையைச் சேர்ந்த 45 அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து 27 மணி நேரத்தை செலவிட்டு மேற்படி பெயர் வெளியிடப்படாத 45 வயது நபரது முகத்தை மீளக் கட்டமைப்பதற்கான அறுவைச்சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
(சிகிச்சை வீடியோ கீழே)
இது இதுவரை உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் சிக்கலான முகமாற்று அறுவைச் சிகிச்சையாக கருதப்படுகிறது. வழமையான முகமாற்று சிகிச்சைகளின் போது, நோயாளியின் முகப்பகுதி மட்டுமே அகற்றப்பட்டு புதிய முகப்பகுதி பொருத்தப்படும். ஆனால், இந்த அறுவைச் சிகிச்சையானது முகத்தின் அகத்தேயுள்ள பகுதிகளையும் உள்ளடக்கி மிகவும் சிக்கலான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபர் கடந்த 20 வருட காலத்திற்கு மேலாக நாடி மற்றும் நாளக் கட்டமைப்பிலான பாதிப்பு ஒன்று காரணமாக முகம் கொடுரமான நிலையில் துன்பப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு பார்வைக் குறைபாடு மற்றும் பேச்சு பாதிப்பு என்பன ஏற்பட்டன.
இந்நிலையில் வால் டிஹெப்ரோன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அவரது முகம், மூக்கு, உதடுகள், பற்கள், தாடை, கன்ன எலும்புகள் என்பவற்றிலுள்ள தசைப் பகுதிகளையும் தோலையும் அகற்றி, அவற்றை பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை தொழில்நுட்பம் மற்றும் நுண் அறுவைச் சிகிச்சை என்பவற்றின் மூலம் மீளக் கட்டமைத்துள்ளனர்.
(சிகிச்சை வீடியோ கீழே)

No comments:

Post a Comment