Thursday, 2 April 2015

Pen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்வது எப்படி??


கணிப்பொறியின் இயங்குதளத்தினை (OS) இன்ஸ்டால் செய்ய முன்பெல்லாம் சிடிக்கள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இப்போதும் கூட, இயங்குதளங்கள் சிடிக்களிலேயே வெளியிடப்படுகின்றன. எனினும், இது அளவில் சற்று பெரியது. எனவே பெரும்பாலும் நாம் நமது சட்டைப் பையில் அடங்கக் கூடிய ஒரு கருவியையே எதிர்பார்க்கின்றோம்.
அப்படி ஒரு கருவியை தேடுகின்றீர்கள் என்றால் அது, நிச்சயம் Pen drive தவிர வேறு ஒரு கருவியாக இருக்க முடியாது. இதன் பயன்பாடு பெருமளவு அதிகரித்து விட்டது. அதனை சாதாரணமாக இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்ய பயன்படுத்த முடியாது. அதற்கு அதனை Bootable டிவைஸாக மாற்ற வேண்டும்.
அதனை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
உங்கள் Pen Drive-ஐ கணிப்பொறியில் Insert செய்யவும்.
பின்னர் Run சென்று Diskpart என டைப் செய்து என்டர் செய்யவும்.
Diskpart ஓபன் ஆகும். அதில் list disk என்று டைப் செய்யவும்.
அதில் உங்கள் கணினியில் உள்ள டிவைஸ்கள் காட்டப்படும்.
அதில் உங்கள் Pen drive எது என்பதை சரியாக தேர்வு செய்து கொள்ளவும்.
For e.g. உங்கள் Pen drive ஆனது Disk 4 என்று வைத்துக் கொள்ளுங்கள்.
Select Disk 4 என டைப் செய்யவும். பின்னர் Disk 4 selected என்ற தகவல் திரையில் தோன்றும்.
Clean என்று டைப் செய்யவும். உங்கள் Pen drive-ல் இருக்கும் தகவல்கள் அழிக்கப்பட்டுவிடும்.
பின்னர் create partition primary என்று டைப் செய்யவும்.
Select partition 1 என்று டைப் செய்க. Partition 1 selected என்ற தகவல் திரையில் தெரியும்.
Active என்று டைப் செய்யவும்.
அதன் பின்பு format fs=fat32 என்று டைப் செய்யவும். திரையில் 100% completed என்று தோன்றும் வரை காத்திருக்கவும்.
பின்னர் Assign என்று டைப் செய்யவும்.
தற்போது உங்கள் Pen drive bootable டிவைசாக மாற்றப்பட்டு விட்டது.
நீங்கள் தேவையான OS-ன் இமேஜை அதில் காப்பி செய்து பின்னர் வழக்கம் போல OS இன்ஸ்டால் செய்வது போல இன்ஸ்டால் செய்ய முடியும்.

No comments:

Post a Comment