Thursday, 2 April 2015

இப்படியே பொயிக்கிட்டே இருந்த என்னய்யா அர்த்தம்…. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா…


சென்னை விமான நிலையத்தின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறதோ என்று எண்ண வைக்கின்றன அங்கு தொடர்ந்து நடந்து வரும் திடீர் விபத்துக்கள்.
நேற்று பகல் சென்னை விமான நிலையத்தில் 39வது முறையாக கண்ணாடி கதவு தானாகவே நொறுங்கி விழுந்துள்ளது. நேற்று பகல் 11 மணியளவில், விமான நிலையத்தின் பன்னாட்டு புறப்பாடு பகுதியில் உள்ள 3-வது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவை (12 அடி உயரம், 3 அடி அகலம்) விமான நிலைய ஒப்பந்த ஊழியர் பாலச்சந்தர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து ஊழியர் பாலசந்தர் மீது விழுந்தது. இந்த விபத்தில் அவர் காயமடைந்தார். காயமடைந்த பாலச்சந்தர் விமான நிலைய மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 4 முறை இவ்வாறான விபத்துக்கள் நடந்துள்ளன. நேற்று பகல் நாந்த விபத்தோடு சேர்த்து மொத்தம் 39 முறை விபத்துக்க்ள் ஏற்பட்டுள்ளன.
இந்த விபத்துக்களில் காயப்படும் 2வது நபர் பாலச்சந்தர். இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கையில், விமான நிலையத்தில், பெரிய விமானங்கள் தரை இறங்கும் போது அல்லது புறப்படும் போது இவ்வாறான விபத்துக்கள் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், 2000 கோடி கொடுத்து புதுப்பிக்கபடுவதற்கு முன் இருந்த பழைய விமான நிலையத்தில் இப்படி அடிக்கடி இடிபாடுகளும் விபத்துக்களும் நடக்காதது ஏன் என்ற கேள்வி அனைவரது மனதிலும் உதித்துள்ளது. பயணிகளுக்கும், அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பெரும் அச்சத்தை இந்த தொடர் விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளன.

No comments:

Post a Comment