குறும்படங்களில் நடித்து வந்த கருணாகரன் தற்போது வெள்ளித்திரையில் காமெடி நடிகராக விஸ்வரூபம் எடுத்து வருகிறார். விரைவில் கதாநாயகனாகவும் அவதாராம் எடுக்கவிருக்கிறார். இவர் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
திருச்சியைச் சேர்ந்த கருணாகரன், பொறியியல் பட்டதாரி ஆவார். ஆரம்பத்தில் அலுவலக வேலை பார்த்தவாறே குறும்படங்களில் நடித்து வந்த இவர், தற்போது முழுநேர நடிகராகி விட்டார்.
இவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது கடந்த காலங்களைப் பற்றியும் ரஜினி பற்றியும் மனம் திறந்து கூறியுள்ளார். ரஜினி உடன் லிங்கா படத்தில் நடித்த அனுபவம் பற்றி கேட்டப்போது ... ரஜினி சாருடன் ‘லிங்கா'வில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பின்போது அவர் எல்லோரையும் கலாய்ப்பார்.
‘நீங்க எப்போதும் இப்படித்தான் திருட்டு முழியுடன் இருப்பீங்களா'னு என்னையும் கலாய்த்தார். என்னுடன் இயல்பாக பழகு, பயப்பட வேண்டாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார். அவருடன் நடித்த 20 நாட்களும் போனதே தெரியவில்லை.
நாம் பேசுவதை அப்படியே பேசிக் காட்டுவார். "படப்பிடிப்பின்போது ஏதாவது புது யோசனை தோன்றினால் உடனே சொல்லுங்க. அதைப் படத்தில் வைத்துக்கொள்ளலாம்" என்று உற்சாகப்படுத்துவார். அந்த மனசு வேற எந்த நாயகனுக்கு வரும்?' என்று கூறினார்.
No comments:
Post a Comment