ஸ்ட்ரீட் ரேஸிங் மற்றும் ஆக்ஷன் கலந்த ஹாலிவுட் மசாலா படம் ’ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்’ தொடர் படங்கள்.
பால் வாக்கர், வின் டீசல், டுவைன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் 7ஆம் பாகமான ‘ஃப்யூரியஸ்7’ கடந்த வியாழன் (ஏப்ரல் 2) வெளியானது.
இப்படத்தின் ஹீரோவான பால் வாக்கருக்கும் கடைசி படமாக அமைந்து விட்டது இந்த படம். இப்படத்துக்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிவு பெறாத சமயத்திலேயே பால் வாக்கர் கார் விபத்தில் பலியானார். ஏற்கனவே, இப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இந்தியாவில் வெளியான இந்தப் படத்திற்கு பெரும் வரவேற்று கிடைத்தது. இப்படம் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ.12 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இது எந்த ஒரு ஹாலிவுட் படமும் செய்யாத ஒரு சாதனையாகும். ஏன் இந்தியப் படங்களே முதல் நாள் இவ்வளவு வசூல் செய்வது அபூர்வம் தான்.

No comments:
Post a Comment