Saturday, 4 April 2015

ஜெர்மன்விங்ஸ் விமான விபத்துக்கு இந்த படம் தான் காரணமா…??


ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றை பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் துணை விமானி மோதியதால் 150 பேரும் உயிரிழந்த சம்பவம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சில தினங்களில், அதேபோன்று வேண்டுமேன்றே விமானத்தை மோதச் செய்யும் கதையைக் கொண்ட திரைப்படமொன்றும் சில நாடுகளில் வெளியாகியுள்ளது.
அர்ஜென்டீனாவில் தயாரிக்கப்பட்ட "ரெலோடஸ் சல்வாஜெஸ்" எனும் ஸ்பானிய மொழி திரைப்படமானது பழிவாங்கல் தொடர்பான 6 கதைகளைக் கொண்டதாகும். நபர் ஒருவர், விமானத்தின் விமானி அறைக்குள் தான் மட்டும் இருந்தவாறு கதவை பூட்டி விட்டு தனது பெற்றோரின் வீட்டின் மீது விமானத்தை மோதுவதும் இக்கதைகளில் ஒன்றாகும். கடந்த ஆஸ்கார் விருதுவழங்கல் விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான விருதுக்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
(வைல்ட் டேல்ஸ் டிரைலர் கீழே)
டேமியன் ஸிப்ரோன் இயக்கிய இப்படம், "வைல்ட் டேல்ஸ்" 'Wild Tales' எனும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. ஜெர்மன்விங்ஸ் நிறுவனம் விமானம் கடந்த 24 ஆம் தேதி மோதிய நிலையில், பிரிட்டனில் கடந்த 27 ஆம் தேதி இப்படம் வெளியாகியமை பலரை வியப்புக்குள்ளாக்கியது. ஜெர்மன்விங்ஸ் துணைவிமானியான அன்ரீஸ் லுபிட்ஸின் நடவடிக்கைக்கு இப்படமும் தாக்கம் செலுத்தியதா எனவும் சிலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், வைல்ட்டேல்ஸ் படமானது கற்பனை அடிப்படையிலானது எனவும் உண்மையான சம்பவங்களுக்கும் அதற்கும் இடையிலான ஒற்றுமையானது தற்செயலானது எனவும்" பி.எவ்.ஐ. எனும் பிரித்தானிய திரைப்பட நிறுவகம் தெரிவித்துள்ளது.
(வைல்ட் டேல்ஸ் டிரைலர் கீழே)

No comments:

Post a Comment