இளைய தளபதி விஜய் பொதுவாக தான் நடிக்கும் படங்களை அடுத்தடுத்து கமிட் செய்து கொண்டே இருப்பார். ஆனால், தற்போது நிலைமை டோட்டலாக மாறிவிட்டது. ஒரு படத்தின் ஷூட்டிங் போகும் போது தான் அடுத்த படத்திற்கு ஒப்புக் கொள்கின்றார்.
அப்படி தான், கத்தியில் நடிக்கும் போது புலி, புலியில் நடிக்க ஆரம்பிக்கும் போது அட்லீ படம் என ஒப்பந்தம் போட்டார். தற்போது புலி படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், தனது 60வது படத்தை ஒப்புக் கொண்டுள்ளாராம் விஜய்.
யார் இயக்குனர் என்று கேட்கின்றீர்களா?? எல்லாம், நம்ம குட்டிப் புலி தான். ’சுப்ரமணியபுரம்’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகிய சசிக்குமார், அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அவர், விஜய்க்காக ஒரு கதையை ரெடி செய்து அதனை விஜய்யிடம் கூறியிருக்கின்றார்.
விஜய்க்கும் கதை பிடித்து போக தற்போது கையில் இருக்கும் இரண்டு படங்களை முடித்ததும் இதனை ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளாராம் விஜய். அப்போ, கத்தி சாயலில் சுப்ரமணியம் ஸ்டைலில் விஜய்க்கு ஒரு மாஸ்+கிளாஸ் கல்ந்த படம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

No comments:
Post a Comment