விமல் நடித்த வாகை சூடவா படத்தில் அறிமுகமான நடிகை இனிய, தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர் சில படங்களில் குத்துப் பாடலுக்கும் ஆடினார்.
தற்போது, இவர், தமிழில் மூன்று படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் தனக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார் இனியா.
மேலும், காதல் சொல்ல நேரமில்லை என்ற படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்து வரும் இனியா, அதில் முத்தக் காட்சியில் நடித்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால், படத்தில் அப்படி ஒரு காட்சி இடம்பெறவே இல்லை என்று கூறியுள்ளார் இனியா. மேலும், அந்த படத்தில் வரும் எனது கேரக்டர் மிகவும் நல்ல கேரக்டர் என்று சான்றிதழ் கொடுக்கின்றார்.

No comments:
Post a Comment