Saturday, 4 April 2015

இன்னும் எத்தனை தமிழர்களின் வாழ்க்கை இரகசியங்கள் இருளில் மூழ்கியதோ?


தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் - பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 ஆண்டுகள் பழமையானவை ! நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்னும் புவித் தரைத்தோற்ற வியலாளர் பல்லாவரம் அருகே தரையில் கிடந்த ஒருகல்லாலான கருவியைக் கண்டெடுத்தார். இது பின்னர் வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது.
இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும். சென்னை பல்லாவரத்தைத் தொடர்ந்து பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகைகளிலும், குடியம்மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட்(இந்திய பழங்கற்கால ஆய்வின் தந்தை) அறிவித்தார்.
மைக்கேல் வுட் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய நாட்டின் வரலாற்றாய்வர் தனது “இந்தியாவின் கதை” (“ The Story Of India ”) எனும் நூலில் 70,000 – 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார் ! பிற வரலாற்றாசிரியர்களும் அவ்வாறேகுறிக்கின்றனர்.
இது தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது. சென்னையில் இருந்து சுமார் 60 கி.மி தொலைவில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் இந்த அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டபழங்கற்கால கருவிகளை. ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத தொன்மை வாய்ந்தவை என்பதுதெரிய வந்தது.
மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வுசெய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் “Early Pleistocene presence of Acheulian hominins in South India” என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார்.
ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன ஆனால் தமிழர் வரலாற்றை எப்போதும் மறைத்துவரும் இந்திய அரசு ஆய்வுகள் தொடர்வதை நிறுத்திவைத்துள்ளது! இன்னும் எத்தனை தமிழர்கள் வாழ்க்கை இரகசியங்கள் இப்படி இருளில் மூழ்கியதோ?

No comments:

Post a Comment