Saturday, 4 April 2015

நாயகனுக்கு பிறகு இதுதான்!!! பாராட்டிய பாரதிராஜா!!?


கிராமத்து மண்வாசனையை திரையரங்கில் தனது படங்கள் மூலம் மணக்க வைத்த பாரதிராஜா, யாராக இருந்தாலும் பாராட்டக் கூடியவர்.
அப்படி சமீபத்தில் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தினை பாரதிராஜாவுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர்.
படத்தை பார்த்து விட்டு பாரதிராஜா, ‘படம் பிரமாதமாக உள்ளது. நாயகனுக்குப் பிறகு நான் பார்த்து வியந்த படம் இது தான். கண்டிப்பாக இந்த படம் இவ்வருடத்தின் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெறும்’ என்று கூறியுள்ளார்.
இப்படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இவர், ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment