’கத்தி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் படம் இயக்கச் சென்ற ஏ.ஆர். முருகதாஸ், அகிரா என்று பெயரிட்டுள்ளார்.
சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக நடிகை தபுவிடம் பேசப்பட்டது. ஆனால் அவர் கால்ஷீட் தர யோசிக்கின்றாரம்.
ஏற்கனவே, இவர் த்ரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
ஆனால், விஷயம் வேறு ஒரு மாதிரியும் பேசப்படுகிறது. படத்தில் சோனாக்ஷியின் கேரக்டருக்கே அதிக முக்கியத்துவம் இருப்பதால் தபு நடிக்க மறுக்கின்றார் என்றும் கூறப்படுகிறது.
எது உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.!!

No comments:
Post a Comment