தெரிந்து கொள்வோம்!! கரூர் பசுபதிநாதர்!!!
பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து , வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, ‘புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு,' என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. அப்போது இறைவன், ‘நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்,' என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - சுகம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - நட்பு
கடகம் - பிரீதி
சிம்மம் - அன்பு
கன்னி - ஆசை
துலாம் - திடம்
விருச்சிகம் - புகழ்
தனுசு - நலம்
மகரம் - அமைதி
கும்பம் - உயர்வு
மீனம் - நற்செய்தி

No comments:
Post a Comment