Sunday, 5 April 2015

அஜித்- கெளதம் ரகசிய சந்திப்பு.. பிண்ணனியில் என்ன..?


அஜித்-கெளதம் மேனன் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த ’என்னை அறிந்தால்’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்தது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாக சிறிது நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்திருக்கிறார். இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு சைனஸ் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார் அஜித்.
தற்போது அஜித் தன் 2 வது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் அஜித்தை ரகசியமாக சந்தித்துள்ளாராம் கெளதம் மேனன். அஜித்தை பொறுத்த வரை ஒரு படத்தின் வேலைகள் தொடங்க உள்ள நேரத்தில் இன்னொரு படத்தை பற்றி பேச கூடாது என்பது தான். அப்படி இருந்தும் அஜித் எதற்காக இயக்குநர் கௌதமை சந்தித்துள்ளார் என்பது தான் புரியவில்லை. கோலிவுட்டிலும் இதே பேச்சுதான் நிலவி வருகிறது.
தற்போது கௌதம் மேனன் சிம்பு படத்தில் பிஸியாக இருக்கிறார். ஒரு சின்ன இடைவெளியில் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது . ஏற்கனவே கௌதம் மேனன், என்னை அறிந்தால் பார்ட் 2 கதை ரெடி யாக உள்ளது மிக விரைவில் அஜித்திடம் சொல்ல உள்ளேன் என்ற ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஒருவேளை அதற்காக தான் இந்த சந்திப்பு இருக்குமோ..? என்ற கேள்வி கோலிவுட் டில் எழும்பியுள்ளது.

No comments:

Post a Comment