Sunday, 5 April 2015

மொட்டை நடிகரால் இயக்குநரை கூப்பிட்டு லெப்ட்,ரைட் வாங்கிய நடிகர்..!


இரெண்டெழுத்து இயக்குநர் படத்தில் டெரர் வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியில் பட்டையை கிளப்பி வருப்பவர் மொட்டை நடிகர். ரசிகர்களிடம் இவருக்கு மவுசு கூடிக்கொண்டே செல்வதால் ஹீரோவுக்கு சமமாக இவரை வைத்து விளம்பரம் படுத்துகிறார்கள் இயக்குநர்கள்.
சமீபத்தில் வெளியான சில படங்களில் டிரைலர் முதற்கொண்டு கட்- அவுட் வரை அனைத்திலும் ஹீரோவை விட காமெடி நடிகருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. அதில் ஒரு படம் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஹீரோவாக புரோமோஷன் ஆன நடிகருடையது.
முதல் படம் மூலம் தான் பெரிய அளவில் பேசப் படுவோம் என எதிர்பார்த்திருந்தவருக்கு மொட்டையால் கண்டம் உண்டானது. இந்நிலையில், இசை வாரிசு இயக்கத்தில் பிரகாசமான நடிகர் நடிக்கும் படத்திலும் மொட்டை நடிகர் நடிக்கிறாராம். சமீபத்திய படங்களைப் போலவே இப்படத்திலும் காமெடியை தூக்கி வைத்து படத்தை பிரபலப் படுத்த நினைத்தாராம் இசை வாரிசு.
இந்த விஷயம் பிரகாச நடிகரின் காதுகளுக்குச் சென்றுள்ளது. ஏற்கனவே தண்ணி நடிகரின் கதையை அறிந்திருந்த நடிகர், இயக்குநரைக் கூப்பிட்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம்.

No comments:

Post a Comment