Sunday, 5 April 2015

ஏ.ஆர் ரஹ்மான் மகன் பாடிய பாட்டு.. குவியும் வாழ்த்து..!


கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் ''ஓ காதல் கண்மணி''. இந்தப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளர்.
இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடபட்டது. ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ள மெண்டல் மனதில்.... பாடல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளது. இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் மகன் அமீன் ஒரு பாடல் பாடி உள்ளார்.
இந்த பாடல் அரபி பாடலாகும் இந்த பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று உள்ளது. அமீன் தன் மாசு மருவற்ற குரலில், இறைவனிடம் பேசுவதுதான் இந்தப் பாடல். பாரம்பரிய அரபு மொழிப் பாடலை அதே மெட்டை வைத்து தன் இசையமைப்பில் தந்திருக்கிறார் ரஹ்மான்.
இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.. இதை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீனுக்கு ஏராளமான பாராட்டுகள் குவிகின்றன.

No comments:

Post a Comment