அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பத்து வருடங்களுக்கு மேலாக வழக்கறிஞராக நடித்து வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கிம்பர்லி கிட்சன் (45) எனும் இப்பெண் ஒருபோதும் சட்டக்கல்லூரிக்கு சென்றதில்லை.
ஆனால், டுகென்ஸ் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞரானதாக போலி ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தன்னை ஒரு வழக்கறிஞராக காட்டிக்கொண்ட இப்பெண், மோசடியான வகையில் வழக்கறிஞராக செயற்பட்டுள்ளார்.
தனது ஊரில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவியாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அண்மையில் சட்ட நிறுவனமொன்றின் பங்காளராகவும் அவர் இணைந்துகொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம் கிம்ர்லி குறித்து புகார்கள் வெளிவர ஆரம்பித்த வேளையில் மேற்படி நிறுவனம் இவர் குறித்த பின்னணியை ஆராயத்தொடங்கியது. அதன் மூலம், இப்பெண் உண்மையில் ஒருபோதும் வழக்கறிஞராகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment