Monday, 6 April 2015

”காங்கிரஸ் எம்.பி.க்கள், என்னை ஆசை காட்டி மோசம் செய்தனர்” சரிதா நாயர் வாக்குமூலம்


கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், கேரள காங்கிரஸ் தலைவர் கே. மணியின் மகனும் எம்.எல்.ஏ.,வுமான ஜோஸ். கே. மணி தன்னை பலமுறை கற்பழித்ததாக, சிறையில் இருந்தவாறு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கும் கேரளாவில் உள்ள பல அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், சரிதாவின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் உலா வந்தன. வாட்ஸாப்பில் வேகமாக பரவிய இந்த வீடியோக்களால் இந்தியா முழுவது சரிதாவின் புகழ் பரவியது.
இந்நிலையில், தனக்கும் அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஒப்புக் கொண்ட சரிதா, நேரம் வரும் போது அரசியல் புள்ளிகள் குறித்த விவரங்களை வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். இதனால், கேரள அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம் தன்னை காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி, ஓட்டலில் வைத்து பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து அடுத்த அரசியல் புள்ளியின் ரகசியத்தை அவிழ்த்து விட்டுள்ளார் சரிதா நாயர். மகளிர் சிறையில் இருந்த வாறு, தன்னை ஏமாற்றியவர்கள் குறித்த விவரங்களை 24 பக்க கடிதமாக எழுதி சிறை அதிகாரியிடம் சரிதா நாயர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்தக் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் சரிதா கேட்டுக் கொண்டுள்ளாராம். இந்த கடிதத்தில் இருந்த தகவல்கள் சில நேற்று கசிந்துள்ளன. அந்த தகவல்களில், அந்த கடிதத்தில், சோலார் பேனல் அமைப்பதற்கு அரசு மானியத்தை பெற்றுத் தருவதாக கூறி சரிதாவை கேரள நிதியமைச்சர் கே.எம்.மாணியின் மகனும் எம்.எல்.ஏ., ஜோஸ் கே மணி டெல்லியில் ஓட்டல் ஒன்றில் வைத்து கற்பழித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கேரள காங்கிரஸ் கமிட்டி செயலளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் சரிதாவைக் கற்பழித்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனராம். இதனால், மீண்டும் கேரள அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment