Monday, 6 April 2015

தமிழர்களை கொன்று குவித்த ஆந்திர போலீஸ்! செம்மரம் வெட்டியதாக புகார்!!


ஆந்திர எல்லையில், செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர காவல்துறையினர் கண்மூடித் தனமாகச் சுட்டதில், 20 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தல் கும்பலுக்கும், ஆந்திர போலீசாருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் உட்பட சுமார் 20 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை, திருப்பதி வனப்பகுதியான ஸ்ரீநிவாசமங்காபுரம் வனத்தில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல் செம்மரக் கட்டைகளைக் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து திருப்பதி காவலர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு கடத்தால் காரர்களை சரணடைய காவலர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அதனை ஏற்க மறுத்து கடத்தல் காரர்கள் எதிர்த்து தாக்கியதால், காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், 20 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடத்தல் கும்பலில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த மோதலில் 200 பேர் ஈடுபட்டுள்ளதால் மேலும், பலர் இறந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அடந்த காட்டுக்குள் ஆங்காங்கே சிதறியுள்ள உடல்களைச் சேகரிக்கும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment