இந்தி திரையுலகின் கவர்ச்சி நடிகையான அதா சர்மா ஒரே வார்த்தையில் சமந்தாவை கண்கலங்க வைத்துள்ளார். ஹார்ட் அட்டாக் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதா சர்மா.
தற்போது அல்லு அர்ஜூன், சமந்தா நடிக்கும் ’சன் ஆப் சத்திய மூர்த்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடிகை சமந்தா ஒரு ஜோக் சொல்ல, இதை நக்கலடித்துள்ளார் அதா ஷர்மா. அவர் சொன்ன கமெண்ட்டை கேட்டு ஷாக் ஆன சமந்தா அழுதே விட்டாராம். சில நாட்களுக்கு முன் சமந்தா டுவிட்டரில் ’சில விஷயங்கள் அடக்க முடியாத கோபத்தை தூண்டுகிறது’ என டுவிட் செய்திருந்தார்.
பொதுவாக ஒரே படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் போது இருவருக்கும் இடையே ஈகோ இருப்பது சாதரணம் தான். ஆனால், ஒருவரை அழ வைக்கும் அளவிற்கு தன் ஈகோவை காட்டுவது எந்த விதத்தில் நியாயம்..?

No comments:
Post a Comment