Monday, 6 April 2015

150 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட ஆம்லெட்…!


பிரிட்டனிலுள்ள உணவு விடுதி ஒன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 150 முட்டைகளினால் தயாரிக்கப்பட்ட ஆம்லெட்டை தயாரித்து விநியோகிக்கிறது. பேர்மிங்ஹாம் நகரிலுள்ள அல்பீ பேர்ட்ஸ் எனும் இந்த உணவு விடுதியிலுள்ள சமையல் நிபுணரான அலி லீஸ் தயாரிக்கும் இந்த பிரமாண்ட ஆம்லெட் 3 அடி விட்டமுடையது.
இது 12,000 கலோரியையும் 945 கிராம் புரதத்தையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆம்லெட்டை தனியாக சாப்பிடுவது சாத்தியமில்லை. குறைந்தபட்சம் 5 பேர் இணைந்தே இதை சாப்பிட வேண்டுமாம்.
(வீடியோ கீழே)
இது தொடர்பாக சமையல் நிபுணர் அலி லீஸ் கூறுகையில், "பண்டிகைக்கால ஊக்குவிப்புத் திட்டமாக இந்த ஆம்லெட்டை தயாரிக்கத் தீர்மானித்தோம்.
நான் ஏற்றுக்கொண்ட மிகப் பெரிய சவால் இது. இப்பெறுபேறு குறித்து நான் திருப்தியடைகிறேன். ஆனால், இந்த ஆம்லெட்டை என்னால் தனியாக சாப்பிட முடியாது. இதிலுள்ள அளவுக்கதிகமான புரதம் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம் என எண்ணுகிறேன். எனது வாழ்க்கையில் நான் தயாரித்த மிகப் பெரிய ஆம்லெட் இதுதான்" எனக் கூறியுள்ளார்.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment