உலகக் கோப்பை போட்டிகளை விஜய் டிவி தமிழில் ஒளிபரப்பியது. இதனால், அந்த டிவியின் டிஆர்பி ரேட்டிங்குகள் எகிறியது.
இதனையடுத்து தற்போது ஆரம்பிக்கப்பட உள்ள ஐபிஎல் போட்டிகளையும் தமிழில் ஒளிபரப்ப முடிவு எடுத்துள்ளனர். இதனை சோனியின் புதிய சேனலாக வரும் ‘சோனி கிக்ஸ்’ நிறுவனம் ஒளிபரப்ப உள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள மல்டி ஸ்கிரீன் மீடியா இதனை தெரிவித்துள்ளது. சென்ற ஐபிஎல் தொடரின் போது கிடைத்த வருமானத்தை விட இந்த ஆண்டு அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை முதல்(ஏப்ரல் 8) தொடங்கப்பட உள்ள இந்த ஐபிஎல் போட்டிகள் மே 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவிஸ், கொல்கத்தா, பஞ்சாப், மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன.

No comments:
Post a Comment