கடந்த 14 வருடங்களாக அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்து உலகம் முழுவதும் வசூலை குவித்து கொண்டிருக்கும் படம் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்'. இப்படத்தின் 7-வது பாகம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படத்தை ஜேம்ஸ் வான் என்பவர் இயக்க, வின் டீசல், பால் வாக்கர், டுவெயின் ஜான்சன் ( த ராக்), மிச்செல் ரோட்ரிக்வெஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இதுவரை வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படங்களின் வரிசையில், இந்தப் படம் தான் அதிக வசூலை குவித்ததுள்ளது.
யுனிவர்சல் நிறுவனம் வெளியிட்ட இப்படம் வசூலில் உலகெங்கும் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதல் நான்கு நாட்களில் மட்டும் 143.6 மில்லியன் டாலர்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது. உலகெங்கும் 392 மில்லியன் (இந்திய மதிப்பில் 2,444 கோடிக்கு மேல்) டாலர்களைக் குவித்துள்ளது.
இதுவரை எந்தப் படத்துக்கும் இவ்வளவு வசூல் கிடைத்ததில்லை. உலகெங்கும் 10500 அரங்குகளிலும், இந்தியாவில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளிலும் வெளியாகியுள்ளது இந்தப் படம். தமிழகத்தில் மட்டும்அதிகபட்சமாக 200 அரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்துக்கு இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் ரூ 50 கோடி வசூல் செய்துள்ளதாம் இப்படம். இதுவும் ஒரு புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment