இத்தாலியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உலகின் மிக வசீகரமான கணித ஆசிரியர் என வர்ணிக்கப்படுகிறார். 26 வயதான பியெட்ரோ போசேலி மிக வசீகரமான தோற்றம் கொண்ட இளைஞர். மாடலிங் துறையிலும் இவர் பிரபலமானவர்.
கடந்த வருடம் ஐரோப்பிய பிட்னஸ் மாடலாக முடிசூட்டப்பட்டவர் இவர். அந்தளவுக்கு கவர்ச்சியான தோற்றம் கொண்டவர் பியெட்ரோ போசேலி. ஆனால், மாடலிங்கில் மட்டும் திறமையானவராக பியெட்ரோ போசேலி இருக்கவில்லை. கல்வியிலும் சிறந்து விளங்கியவர் பியெட்ரோ. இவர் பொறியியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (யூ.சி.எல்.") கடந்த மாதம் வரை விரிவுரையாளராக டாக்டர் பியெட்ரோ போசேலி பணியாற்றியுள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்திலேயே இவர் உயர்கல்வியும் கற்றார். இப்பல்கலைக்கழகத்தில் முதல் வருட மாணவராக கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக அவருக்கு சிறப்பு புலமைப் பரிசிலும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலாநிதி பியெட்ரோ போசேலியின் மாணவர் ஒருவர் அண்மையில் இணையத்தளத்தில் மேற்கொண்ட தேடுதலின்போது, அவர் மாடலாக விளங்கிய பின்னணியை அறிந்து கொண்டு அது குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக்கினார். இதையடுத்து, உலகின் வசீகரமான கணித ஆசிரியர் என கலாநிதி வர்ணிக்கப்படுகிறார்.

No comments:
Post a Comment