Tuesday, 7 April 2015

15 முறை திருமணம்.. கவலையில் காவ்யா மாதவன்..!


மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் காவ்யா மாதவன். தமிழில் காசி, என் மன வானில் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு நிஷால் சந்திரா என்பவரை மணந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
தற்போது மீண்டும் நடிக்க வந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் காவ்யா மாதவன் நடிகர் திலீப்பை காதலிப்பதாகவும், இருவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப், பிரபல நடிகை மஞ்சு வாரியரை காதல் திருமணம் செய்தார். இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தான் காவ்யா மாதவனை வருகிற 16-ந்தேதி குருவாயூர் கோவிலில் வைத்து நடிகர் திலீப் திருமணம் செய்ய இருக்கிறார் தகவல் பரவியது. இந்த முறையும் தனது மறுப்பை திலீப் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "கடந்த ஓராண்டில் மட்டும் 15 முறை எனக்கும் காவ்யா மாதவனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் மீடியாவில். எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றினால், அதை நானே உங்களுக்கு தெரிவிப்பேன். இப்போது வெளியாகி இருக்கும் தகவல் புரளி. அதில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.
இதுகுறித்து காவ்யா மாதவன் கூறுகையில், " இந்த தகவலில் உண்மை இல்லை. அது வெறும் புரளி. எனது வாழ்க்கையில் ஏதாவது நல்ல தருணங்கள் ஏற்பட்டால் அதை நானே உங்களுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுங்கள்," என்றார்.

No comments:

Post a Comment