Tuesday, 7 April 2015

இந்தியக் கொடியை அவமதித்த பிரிட்டன் எஃப்-1 வீரர், மன்னிப்புக் கேட்டார்!!


ஹைதராபாத்தில் நேற்றைய முந்தினம், தேசியக் கொடியை அவமதித்த நிகழ்வு குறித்து மன்னிப்புக் கோரியுள்ளார் முன்னாள் பிரிட்டன் ஃபார்முலா ஒன், கார் பந்தைய வீரர் டேவிட் கவுத்தர்ட்.
நேற்றைய முந்தினம் ஹைதராபாத்தில், ரெட் புல் பார்முலா ஒன் கார் பந்தையம் நடந்தது. இதில், 13 முறை கிராண்ட் பிரிக்ஸில் வெற்றி பெற்ற, முன்னாள் ஃபார்முலா ஒன் வீரர் டேவிட் கவுத்தர்ட் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், டேவிட் காரில் அமர்ந்தவாறு கூட்டத்தினர் முன் வந்துள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு அருகில் இந்திய தேசியக் கொடி ஒன்று இருந்துள்ளது. அந்த சமயம், கொடி காரில் இருந்து வெளியில் தரையில் விழுந்தது.
இதை டேவிட் கவணிக்க வில்லை. இந்நிலையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் அங்கு விரைந்து வந்து கொடியை எடுத்து டேவிட் கையில் கொடுத்துள்ளார். இதை அடுத்து, டேவிட் கொடியை அசைத்தவாறு சென்றுள்ளார்.
கூட்டத்தினர் மத்தியில், டேவிட் கொடியை தவற விட்டச் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கவுத்தர்ட், இந்தியாவில் தேசியக் கொடி குறித்த விதி முறைகள் தனக்கு தெரியாது, என்றும், நடந்த செயலுக்கு தான் வருந்துவதாகவும், தன்னை மன்னித்து விடும் படியும் கேட்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவில் கொடி தொடர்பாக உள்ள விதிமுறைகள் எனக்குத் தெரியாது. எனவே நடந்த சம்பவத்துக்காக இந்திய மக்களிடம் வருத்தம் தெரி வித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியா மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.

No comments:

Post a Comment