Tuesday, 7 April 2015

குடும்பத்தோடு சேர்ந்து, பத்திரிக்கையாளர் முகத்தை அடித்து கிழித்த நடிகை…


சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை முகத்தில் காயம் ஏற்படும் அளவுக்கு அடித்து நொறுக்கியுள்னர் நடிகை மாயாவும் அவரது குடும்பத்தினரும். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் மனோஹரி.
ஜெயப்பிரியா முரசு என்ற பத்திரிக்கையில், சப் எடிட்டராக பணியாற்றி வரும் இவர், நடிகை மாயாவின் வீட்டருகில் வசித்து வருகிறார். மனோஹரி நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய போது, நடிகை மாயாவின் கார் மனோஹரியின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இரு சக்கர வாகனத்தில் வந்த மனோஹரி, தன் வாகனத்தை நிறுத்த இடமில்லை என்று நடிகை மாயாவிடம் முறையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த் தகறாறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், நடிகை மாயா எல்லை மீறி பேச, வாக்குவாதம் மேலும் வலுத்து கைக்கலப்பாகியுள்ளது. இந்த மோதலில், மனோஹரியை நடிகை மாயாவும் அவரது மகனும், மகளும் அடித்து காயப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தால், மனோஹரிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மனோஹரி. அ.தி.மு.க., ஆதரவாளரான நடிகை மாயா, சண்டை போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்பது அனைவரும் அறிந்ததே.
ஏற்கனவே இவர், தனது அண்டை வீட்டாரும், நடிகையுமான சீதாவை அடிக்கடி ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக புகார் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment