ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கூடை கூடையாக இறங்கும் தக்காளியை போன்று பல ஹீரோயின்கள் தமிழ் சினிமாவில் வந்து இறங்கினாலும் பத்து வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் நயன்தாராவுக்கு தான் மவுசு அதிகம்.
சிம்புவின் காதல் தோல்வி, பிரபுதேவாவின் கல்யாண தோல்வி என்று துவண்டு கிடந்த நயன்தாரா மனம் தளராமல் மீண்டும் நடிக்கவந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இதுவரை ரஜினி விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என்று கோலிவுட்டின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்கள் எல்லாம் நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று நினைத்து வருகின்றனர். ஆரம்பம் படத்தில் அஜித்துடன் நடித்து தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கிய நயன்தாராவின் சம்பளம் மளமளவென உயர்ந்து ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.
நண்பேன்டா, இது நம்ம ஆளு ஆகிய படங்களுக்கே அவர் ரூ 2 கோடிகளுக்கு மேல் வாங்கியிருக்கிறார். இனி புதிதாக ஒப்பந்தமாகும் படங்களுக்கு ரூ 2.5 கோடி வரை அவர் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாம். இருந்தாலும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் போட்டி போட்டு அவரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
தற்போது அவர் சூர்யாவுக்கு ஜோடியாக ‘மாஸ்', சிம்புவுக்கு ஜோடியாக ‘இது நம்ம ஆளு', ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்', விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரெளடிதான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதைத்தவிர ‘மாயா' என்ற பேய் படத்திலும், மம்முட்டி ஜோடியாக ‘பாஸ்கர் த ராஸ்கல்' என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.

No comments:
Post a Comment