கடந்த 1982–ஆம் ஆண்டு ரஜினி மூன்று வேடங்களில் நடித்து ரீலிசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘மூன்று முகம்’. ரஜினிக்கு இந்தப் படம் திருப்புமுனையாக அமைந்தது. அலெக்ஸ்பாண்டியன் என்ற போலீஸ் கேரக்டரில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரஜினி.
தற்போது இந்தப் படத்தை ரீமேக் செய்து அதில் ரஜினியை போன்று மூன்று வேடங்களில் நடிக்க துடிக்கிறார்களாம் ஒரு சில முன்னணி நடிகர்கள். சமீபத்தில் கூட மூன்று முகம் படத்தை விஷ்ணுவர்த்தன் ரீமேக் செய்ய இருக்கிறார் என்றும் ரஜினி நடித்த மூன்று வேடங்களில் கார்த்தி நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது மூன்று முகம் படத்தின் ரீமேக்கில் நடிக்க துடிக்கிறாராம் விஜய். காரணம் மூன்று முகம் படத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்னும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்த ரஜினியின் கேரக்டர் விஜய்க்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம்.
இதனால் ரஜினியின் மூன்று முகத்திலேயும் நடித்துவிட முடிவு செய்துவிட்டாராம் விஜய். அப்போ கூடிய விரைவில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முகம் விஜய்யையும் பார்க்கலாம்.

No comments:
Post a Comment