Wednesday, 1 April 2015

விஜய் ரசிகரா..? அஜித் ரசிகரா..? கிண்டலாக பதில் சொன்ன விஜய்சேதுபதி..!


வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் இவர் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியின் 22வதுஆண்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
அப்போது அவரிடம் மாணவ, மாணவிகள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். எதற்கும் அசராமல் பதில் அளித்தார் விஜய் சேதுபதி. இதில் பல கிண்டல்களும், கேலிகளும் அடங்கும்.
அவரிடம் ஒரு மாணவி நீங்களும், சிவகார்த்திகேயனும் சேர்ந்து நடிப்பீங்களா? என்று கேட்டார். அதற்கு விஜய்சேதுபதி, நானும் அவரும் எம்.ஜீ.ஆர் – சிவாஜி பாருங்க. நீங்க வேற நான் நடிக்க வந்தே 4 வருஷம்தான் ஆகுது என்றார்.
பிறகு இன்னொரு மாணவி நீங்க தல ரசிகரா? தளபதி ரசிகரா ? என்று கேட்டதற்கு விஜய்சேதுபதி, சிரித்துக்கொண்டே நான் கவுண்டமணி சார் ரசிகன் என்றார்.

No comments:

Post a Comment