Wednesday, 1 April 2015

இன்றைய தினம்....!! (ஏப்ரல் 2)


ஏப்ரல் 2
மகாவீர் ஜெயந்தி
சமண சமயத்தின் குருவாகவும், சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவியவருமான மகாவீரர் பிறந்த தினம் உலகம் முழுவதும், சமண சமயத்தவரால் மகாவீரர் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. வர்தமானர் என்ற இயற்பெயர் கொண்ட மகாவீரர் சித்தார்த்தர்-திரிசாலா என்ற அரச தம்பதியருக்கு இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் பிறந்தார்.
அவர் கருவில் இருக்கும் போது அரசனுக்கு செல்வம் கொழித்ததாகவும், அரசிக்கு சுப கனவுகள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் குழந்தை பிறந்ததும் வளர்தல் என்று பொருளுடைய ‘வர்தமானர்’ என்று பெயரிட்டனர் சித்தார்த்தரும் திரிசாலாவும். சமண சமய நம்பிக்கைகளின்படி, வர்தமானர் பிறந்ததையடுத்து தேவலோக அரசன் இந்திரன் ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிசேகம் உற்பட சடங்குகளைச் வர்தமானருக்குச் செய்வித்து அன்னையிடம் கொடுத்ததான்.
சித்தார்த்தனின் மகனாக இளவரசனாக வாழ்ந்தார் வர்த்தமானன். இருப்பினும் அச்சிறுவயதிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். தியானத்திலும் தன்னறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக விளங்கினார். மெதுவாக உலக சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். தமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்.
துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டார். பிற உயிரினங்களுக்கு,மனிதர்கள்,தாவரங்கள் மற்றும் விலங்குகள்,மதிப்பளித்தார்.அவற்றிற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.இவ்வாண்டுகளில் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.
அவரது பொறுமையும் வீரமுமே அவர் மகாவீரர் என அழைக்கப்பட காரணமாயிற்று. இந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார். அச்சமயம் அவர் அளவற்ற சமசீர்மை,அறிவு மற்றும் கட்டுப்பாடு கொண்டவராக இருந்தார். மகாவீரர் நாடு முழுவது பயணித்து மக்களிடையே தாமறிந்த ஆன்மீக உண்மையை பரப்பத் துவங்கினார்.
வெறும் கால்களில் துணிகள் எதுவுமன்றி கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரின் பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது. தமது 72ஆவது வயதில் பாவபுரி என்னுமிடத்தில் இந்திய நாட்காட்டியில் தீபாவளியின் கடைசி நாளன்று நிர்வாணம் எய்தினார்.அவர் பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.
அவர் கி.மு 599 முதல் 527 வரை வாழ்ந்ததாக ஜைனர்கள் நம்பினாலும் சில வரலாற்றாசிரியர்கள் கி.மு 549-477 காலத்தவராக கருதுகிறார்கள்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1972 - நடிகர் சார்லி சப்ளின் 1950களில் கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டபின்னர் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்கா வந்தார்.
1983 - யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
1984 - ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இன்றைய சிறப்பு தினம்
உலக சிறுவர் நூல் தினம்
மால்வினாஸ் நாள் (அர்ஜென்டீனா)
உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம்

No comments:

Post a Comment