Wednesday, 1 April 2015

பிரான்ஸின் ’இரும்பு பெண்’ பற்றி உங்களுக்கு தெரியுமா??


பிரான்ஸின் ’இரும்பு பெண்’ என்று அழைக்கப்படும், ஈபிள் டவர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?? உலகிலேயே மிக உயரமான ரேடியோ டவர் 1062 அடி உயரம் கொண்டது என்பது மட்டும் தான் தெரியும்.
இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமா??
ஈபிள் டவர் கட்டும் பணிகள் 1887ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இது 1889ஆம் வருடம் மார்ச் மாதம் 31ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதனை கட்டிமுடிக்க 2 வருடங்கள், 2 மாதங்கள், 5 நாட்கள் ஆனது. இதன் படி தற்போது இதன் வயது நேற்றுடன்(31.04.2015) 126 வருடங்கள் ஆகின்றது.
இதன் மொத்த உயரமான 324 மீட்டர்களில் 24 மீட்டர்கள் இதன் உச்சியில் இருக்கும் ஆன்டனாவின் உயரமாகும். இதனை கட்டிமுடிக்க ஆன செலவானது, 7,799,401.31 பிரான்ஸ் தங்க காசுகள் ஆகும்.
ஈபிள் டவரானது முதலில் 20 வருடங்களில் மீண்டும் அகற்றிவிடும் நோக்கத்தில் கட்டப்பட்டது. ஆனால் இது உலகம் முழுவதும் பிரபலம் ஆனதால், இடிக்கப்படாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை இதுவரை 18 முறை வண்ணப்பூச்சு செய்துள்ளனர்.
தொடர்ந்து 41 வருடங்கள் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என்ற பெருமையை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வருடத்திற்கு தோராயமாக 7 மில்லியன் மக்கள் பார்த்து ரசிப்பதாகவும், தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இதனை 250 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலா துறை கூறுகின்றது.
10,000 டன்கள் எடை கொண்ட இந்த ஈபிள் டவரின் உச்சிக் கோபுரம், பலத்த காற்று வீசும்போது 6 முதல் 7 மீட்டர் வரை முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்குமாம்.

No comments:

Post a Comment