ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ, முதன் முறையாக பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.
’UnIndian’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தனிஷ்தா சட்டர்ஜி ஹீரோயினாக நடிக்கின்றார். அனுபமா ஷர்மா இயக்கும் இப்படத்திற்கு சலீம் சுலைமான் இசையமைக்கின்றார்.
ஆஸ்திரேலியாவில் தொடங்கிய இதன் முதல் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றதாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் தனிஷ்தாவுடன் உற்சாகமாக நடனமாடியுள்ளார் பிரட் லீ.
மேலும், ’உங்களை விட நல்லாவே டான்ஸ் ஆடுறேன்ல’ என்று ஹீரோயினை பயங்கரமாக கலாய்க்கவும் செய்கின்றாராம். இவரால் படப்பிடிப்பு தளம் எப்பவும் கலகலப்பாகவே இருக்கின்றதாம்.
இப்படம் முழுநீள காமெடி படமாக உருவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment