Friday, 3 April 2015

கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்.. 147 மாணவர்கள் பலி…!


கென்யாவில் கரிஸ்ஸா பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் வடகிழக்கு பகுதியில் கரிஸ்ஸா என்ற இடத்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி வளாகத்திற்குள் முகமூடி அணிந்தபடி நுழைந்த நான்கு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
விடுதிகளில் மாணவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது கையறி வெடிகுண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் இந்த தாக்குதலை நிகழ்ந்தியுள்ளனர். கல்லூரி வளாகத்திற்குள் இருந்த இஸ்லாமிய மாணவர்களை வெளியேற்றிவிட்டு, கிறிஸ்தவ மாணவர்களையும் பிறரையும் கொன்றுள்ளனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்க்கு வந்த கென்யப் படையினர் கல்லூரி வளாகத்தை சுற்றி வளைத்து தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.
16 மணி நேரம் நடைபெற்ற கடும் சண்டைக்குப்பிறகு தீவிரவாதிகள் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கென்ய அரசு அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சோமாலியாவின் ஷெபாப் என்ற பயங்கவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அல் கைதா இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள். கடந்த 1998இல் கென்யாவில் அமெரி்க்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. இத்தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment