Friday, 3 April 2015

பிரதமர் மோடியின் பார்வைக்கு செல்லும் தமிழ் படம்!!


இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படம் பிரதமர் நரேந்திர மோடி பார்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் வருடம் ஜூன் மாதம் வெளியான இப்படம் வெகுவாக அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் நாசர், பேபி சாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும், இப்படம் சிறந்த பாடல் வரிகள் பிரிவில் நா.முத்துக்குமாருக்கும், சிறந்த பின்னணி பாடகர் என்று உத்திரா உன்னிகிருஷ்ணனுக்கும் தேசிய விருது வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குனர் விஜய் கூறுகையில், ’இந்த படத்தை கேபினட் அமைச்சர் மேனகா காந்தி பார்த்து மிகவும் பாராட்டினார். அவர் இப்படத்தை பார்க்குமாறு பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்துள்ளார். இதற்கு நிச்சயம் அமலா மேடத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் தான் படத்தினை அமைச்சர் மேனகா காந்திக்கு அனுப்பினார்.’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment