உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் கோப்பையை வெல்வதற்கு அணியை வழிநடத்திய திருப்தியுடன் அவ்வணியின் தலைவர் மைக்கல் கிளார்க் ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.
ஆனால், இச்சுற்றுப்போட்டியின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தனது செக்ஸ் வாழ்க்கை குறித்து கேட்கப்பட்ட கேள்வியால் சங்கடத்துக்குள்ளாகும் நிலையையும் மைக்கல் கிளார்க் எதிர்கொண்டார். அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வென்ற பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே இச்சம்பவம் இடம்பெற்றது.
மைக்கல் கிளார்க்கிடம் கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவர், "நீங்கள் அணித்தலைவரான பின்னர் அனுபவிக்கும் அதிக செக்ஸ் குறித்து உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டார். இக்கேள்வியால் ஒரு வினாடி திக்குமுக்காடிப் போனார் மைக்கல் கிளார்க். அருகிலிருந்த சக வீரர் ஸ்டீவன் ஸ்மித், இக்கேள்வியால் மைக்கல் கிளார்க்கை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்.
"எந்தளவு என்னைப் பற்றி நீங்கள் அறிவீர்கள்? இது என் மனைவியிடம் கேட்க வேண்டிய கேள்வி என மைக்கல் கிளார்க் சிரித்துக்கொண்டே கூறினார். ஆனால், அக்கேள்வியை கேட்ட செய்தியளார், உடனடியாக திருத்தமொன்றைச் செய்தார். தான் சக்ஸஸ் (வெற்றி) என்பதற்கு பதிலாக செக்ஸ் எனக் கூறிவிட்டதாக அச்செய்தியாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment