Sunday, 5 April 2015

பாடகரை குத்துச்சண்டைக்கு அழைத்த வெனிசூலா ஜனாதிபதி…!


வெனிசூலாவின் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ வீதி ஒன்றில் வைத்து பிரபல பாடகர் ஒருவரை குத்துச்சண்டைக்கு வருமாறு சவால் விடுத்து பலரையும் வியப்புக்குள்ளாக்கினார்.
52 வயதான ஜனாதிபதி மதுரோ, கசியஸ் கிளே (அமெரிக்க குத்துச்சண்டை ஜாம்பவான் முஹமது அலி) பாணி எனக் கூறிக்கொண்டு கைகளை மடக்கி நீட்டி குத்துச்சண்டை அசைவுகளையும் அவர் செய்துகாட்டியமை வீடியோவில் பதிவாகியுள்ளது.
(குத்துச்சண்டை வீடியோ கீழே)
வெனிசூலாவின் மிகப் பிரபலமான பாடகர்களில் ஒருவரான காந்தி அரோசாவையே தன்னுடன் குத்துச்சண்டைக்கு வருமாறு ஜனாதிபதி மதுரோ அழைத்தார். ஊடகவியலாளர்களுடன் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி மதுரோ இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
எனினும், இந்த திடீர் போட்டி ஆவேசமானதாக இருக்கவில்லை. இப்போட்டியின்பின் இருவரும் கைகுலுக்கி கொடுத்துக்கொண்டனர்.
(குத்துச்சண்டை வீடியோ கீழே)

No comments:

Post a Comment